வரவு செலவு திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் பிர­சன்னமாகிய ஜனாதிபதி

290 0

வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றைய தினம் இரண்டாவது நாளாகப் பாராளுமன் றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் இன்று பாராளுமன்ற வளாகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங் கத்தின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிகவும் சரி யானது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.