ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளமையை அடுத்தே, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாண பதில் முதலமைச்சராக பதவியேற்றுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை செந்தில் தொண்டமான், ஊவா மாகாண பதில் முதலமைச்சராக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.