நுவரெலியா ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் நிதியிலிருந்து, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் வேண்டுக்கோளுக்கினங்க ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்கு செல்லும் 1.5 கிலோ மீற்றர் பாதையை செப்பனிடுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இப்பாதை பல வருடகாலமாக செப்பனிப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது. இதன் காரணமாக இப்பிரதேச மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர்.இப்பிரச்சினையை பிரதேச மக்கள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இதனையடுத்து குறித்த வீதியை செப்பனிடுவதற்காக அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், மலையக மக்கள் முன்னணி செயலாளர் ஏ.லோறன்ஸ் என பலரும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, பாதை புனரமைப்புக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தனர்.