ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிவில் சமூக தலைவர்கள் குழுவென்று இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டது.
35 பேர் கொண்ட இந்த குழுவினர் கடந்த 28ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து அநுராதபுரம், கண்டி, கிளிநொச்சி என நாட்டின் பல மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றனர்.
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் நிலைமைகள், சமாதான, நல்லிணக்க செயற்பாடுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்களின் கலாச்சார நிலைமைகள், பெண்களின் சமூக வகிபாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராயும் வகையில் அவர்களது விஜயம் அமைந்துள்ளது.
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர்கள் இன்று பிற்பகல் மாவட்டச் செயலயத்திற்கு வருகை தந்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் ஆகியோர் அடங்கிய மாவட்டச் செயலக குழுவினரை சந்தித்து கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
இதன் பின்னர் குறத்த குழுவினர் கிளிநொச்சி சிவபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்து அங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்ககை நிலைமைகளையும் நேரில் அறிந்துகொண்டனர்.