தொழிற்சாலை பணியாளர்கள் 86 பேர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

318 0

28-1372420952-3-factory-jpgஅவிசாவளை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 86 பேர் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறு காரணமாகவே இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுள், 28 ஆண்களும், 58 பெண்களும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளது.

வாந்தி, வயிற்றுறோட்டம் மற்றும் சுவாசக் கோளாறுகள் காரணமாகவே இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.