கருணா அம்மான் என்று அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய இதனை நிராகரித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு சொந்தமான வானகமொன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் காவல்துறை நிதி மோசடி பிரிவினரால் கடந்த 29ஆம் திகதி முன்னாள் பிரதியமைச்சர் முரளிதரன் கைதுசெய்யப்பட்டார்.
இதையடுத்து, டிசம்பர் ஏழாம் திகதிவரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே இன்று அவரது பிணை கோரிய மனு நிராகரிக்கப்பட்டது.