கொழும்பு மிகவும் ஆபத்தில் உள்ளது என்றும் ஆகவே குறைந்தது இரண்டு வாரங்களாவது நகரத்தை முடக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மேயர் ரோஸி சேனநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நகரத்தை கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே நகரத்திற்கு வெளியே வைரஸ் பரவாமல் தடுக்க கொழும்பில் 14 முதல் 21 நாட்கள் வரை முடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் கொழும்புக்குள் நுழையவோ வெளியேறவோ எவரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் சேனநாயக்க கூறினார்.
மேலும் கடந்த சில நாட்களாக கொழும்பிலே அதிகளவிலான கொரோனா தொற்று உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.