சிறிலங்காவில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 387 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் அதிலகளவிலான அதாவது 231 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 42 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 20 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 11 பேர் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
02 பேர் காலியைச் சேர்ந்தவர்கள் என்றும் இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தலா ஒருவர் அடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 11 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 807 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 61 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.