ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த பிணை அனுமதியை வழங்கியுள்ளது
இதன்படி, அவர் 25ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 5 இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீர பிணைகளிலும் அனுமதிக்கப்பட்டார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே தேர்தல் காலத்த்தில், இரகசிய ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டுள்ளதாக கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் திஸ்ஸ அத்தநாயக்க ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
2014 டிசம்பர் மாதம் 22ஆம் திகதி அவர் இந்த ஆவணத்தை வெளியிட்டிருந்தார்.
எனினும் அந்த ஆவணம் போலியானது என்பது கண்டறியப்பட்டது
இதனையடுத்து, திஸ்ஸ அத்தநாயக்க 2015 பெப்ரவரி 2ஆம் திகதி
கைதுசெய்யப்பட்;டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.