கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் பல அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளன.
மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி கட்டுமாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைப்பார். இந்த முனையத்தை நிர்மாணிக்க 107 பில்லியன் ரூபாவுக்கு மேலான தொகை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு ஜப்பான் முதலீடு செய்கிறது. இதனை மூன்றாண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.