முல்லேரியா வைத்தியசாலையில் (கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை) உள்ள பி.சி.ஆர் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படவில்லையென சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கிழக்கு முல்லேரியா வைத்தியசாலையில் அண்மையில் திருத்தப்பட்ட பி.சி.ஆர். இயந்திரம் மீண்டும் பழுதடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே இதுத் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள சீனத் தூதரகம், அண்மைய வாரங்களாக வேகமாகப் பரிசோதிக்க பயன்படுத்தப்பட்ட பரிசோதனைகளுக்கான உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையால் குறித்த இயந்திரத்தின் செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது புதிய பரிசோதனை உதிரிப்பாகங்களின் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவை 3-4 நாட்களில் வரும் எனவும் அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.