பழைய சைக்கிள், பாதணி இல்லாமல் ஓட்டப் பந்தயம்! வைரலாகும் சிறுவனின் புகைப்படம்

342 0

பழைய சைக்கிளுடனும் பாதணி இல்லாத வெறுங்கால்களுடனும் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட கம்போடிய சிறுவனின் புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்கள் மூலமாக கம்போடியாவின் தலைநகர் புனோம் பென்னில் நடைபெற்ற எம்டிபி-2020 சைக்கிள் ஓட்டப்  பந்தயத்தில் பிச் தியாரா (Pich Theara) என்ற சிறுவன் பழைய சைக்கிளுடன், பாதணி மற்றும்  தலைக்கவசம் இல்லாமல் மிகவேகமாக சைக்கிள் ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.

குறித்த சிறுவனின் தந்தை கட்டுமானத் தொழிலாளி  என்றும் அவனின் தாய்க்கு கடுமையான  நோய்வாய்ப்பட்டவர் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் ஐந்து பேருடன் பிறந்த இச்சிறுவன்தான் இவர் வீட்டின் கடைசி பிள்ளை. வீட்டில் மிகவும் வறுமையில் இருந்தாலும் விளையாட்டு மீதான அன்பின் காரணமாக, இச்சிறுவன் எந்தவித தயக்கமும் இல்லாமல் போட்டியில் பங்கேற்றுள்ளான்.

இந் நிலையில் குறித்த சிறுவன்  போட்டியில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்பிறகு தியாராவுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்கரம் நீண்டுவருகிறது. அந்தவகையில்  “கம்போடியா இளைஞர் சங்கத்தின் தலைவர் மெங் பென்லோக் தியாராவுக்கு ஒரு புதிய பந்தய சைக்கிளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.