தரம் 5 புலமைப்பரிசில் மாவட்ட அடிப்படையில் வெட்டுப் புள்ளி விபரங்கள்

297 0

2020 ஆம் ஆண்டுக்கான தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் தமிழ்மொழிமூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு 160 புள்ளிகளும், மன்னார் மாவட்டத்துக்கு 158 புள்ளிகளும், திருகோணமலை மாவட்டத்துக்கு 159 புள்ளிகளும், கொழும்பு மாவட்டத்துக்கு 162 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பரீட்சையின் வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் மாவட்டங்களின் விவரம் வருமாறு:-

162 புள்ளிகள்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.

160 புள்ளிகள்

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை.

159 புள்ளிகள்

திருகோணமலை, பதுளை, பொலனறுவை.

158 புள்ளிகள்

நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்.

155புள்ளிகள்

புத்தளம், மொனராகலை.