பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எனக்கு விளங்கப்படுத்தினார். அதற்கேற்ப நான் சுயாதீனமாகச் செயற்படுவேன். நான் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த உங்களது ஒத்துழைப்புக்களை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என கடந்த திங்கட்கிழமை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் பதவியேற்றபின் மத்தியவங்கி ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியானது சுயாதீனமான முறையிற் செயற்படும். மத்தியவங்கிக்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன. கொள்கைகள் நிறுத்தப்பட்டு ஆரம்பிப்பதிலிருந்து வெளியே வரவேண்டும். மத்திய வங்கியை நம்பியே நாட்டின் பொருளாதாரம் அமைந்துள்ளது. எனவே அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் முறையில் நாம் செயற்படவேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தினார். அதன்படியே நான் செயற்படுவேன். எனது அனுபவத்தைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உங்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றேன் எனவும் தெரிவித்தார்.