ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது – லண்டன் மருத்துவரான பிலே

308 0

jaya-aiadmkநேற்று மாலை மாரடைப்புக்கு உள்ளான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மருத்துவமனையின் அதி தீவிர கிசிச்சை பிரிவில் தொடர்ந்தும் கிசிச்சை பெற்று வருவதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடனான மருத்துவ பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், அவரின் உடல்நிலை பாரிய அபாய நிலைலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைவர்கள், தமிழக தலைமைச் செயலாளர் உட்பட பலர் தற்போது மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை கட்சியின் தலைவர்கள் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையைச் சூழவுள்ள வீதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் கூடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தின் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு, விசேட காவல்துறையினர் உட்பட்டவர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் வெளி மாவட்டங்களிலும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, இராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, லண்டன் மருத்துவரான பிலே, ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.