முஸ்லிம் காங்கிரஸூக்கு காலக்கெடு

292 0

indexஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார் என்பதை இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய அறிவித்தல் விடுத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மேற்கொள்ளப்பட்ட யாப்பு திருத்தத்தின் மூலம் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் செயலாளர் என இரண்டு பதவிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, கட்சியின் செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் ஆகிய பதவிகளில் ஒன்றை பெயரிட்டு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்த சிக்கல் நிலைமை தீர்த்துக்கொள்ளப்படாத பட்சத்தில், எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதில் முஸ்லிம் காங்கிரஸ் சிக்கல் நிலைமை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.