காவல்துறைமா அதிபருக்கு பிரதமர் அழைப்பு – சந்திப்பு இன்று

271 0

ranil1சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்வது தொடர்பில் காவல்துறைமா அதிபருக்கு தொலைபேசி மூலம் கலந்துரையாடிய சம்பவம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு பிரதமால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்ணாயக்க ஆகியோருக்கே இந்த அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், இந்த சம்பவத்தில் காவல்துறைமா அதிபர்; குற்றங்கள் எதுவும் இழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தாம் கூறும் வரையில் நிலமே என்பவரை கைதுசெய்யவேண்டாம் என்றே மறுபுறத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

எனவே, அவர் மீது குற்றங்களை சுமத்தமுடியாது.

இதேவேளை காவல்துறைமா அதிபர் நிலமே என்றுக்கூறியவர், தெவிநுவர கோயிலின் பஸ்நாயக்க நிலமே தில்ஸான் குணசேகர என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.