வரி அதிகரிப்பு இனி தவிர்க்கப்படும் – அரசாங்கம்

284 0

z_fea800அடுத்த வரவு செலவு திட்டத்தில் மக்கள் மீது வரி சுமத்தப்படுவது தவிர்க்கப்படும் என்று அமைச்சர் சரத் அமுனுகம கூறியுள்ளார்.

கண்டி – கலகெதர பகுதியில் நேற்று இடம்பெற்ற தொகுதி மறுசீரமைப்பு நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அதிகரித்துள்ள வரிகளும் விரைவில் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தம்மிடம் இருப்பதாக மஹிந்த ராஜபக்ஸ  கூறிய ஆதார கோப்புகளை முடிந்தால் காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு சரத் அமுனுகம சவால் விடுத்துள்ளார்.