ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி – அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

578 0

bandulla_guna-e1356200632969-720x480ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஜனவரி மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் ஆகின்றபோது அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161 ரூபா வரை வீழ்ச்சியடையும் என அவர் எதிர்வுகூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையிலும், இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.