ஐக்கிய தேசிய கட்சியினருக்கு அடிமைப்பட்டு சுதந்திர கட்சியின் கொள்கைகளை காட்டிக்கொடுக்க வேண்டாம் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசியல் அமைப்பின் திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பயன்படுத்தி பௌத்த மதத் தலைவர்களை ஏமாற்ற முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பின் மூலம் ஒற்றை ஆட்சி கோட்பாட்டை அகற்றாமல் சமஷ்டி ஆட்சி முறையின் மூலக்கூறுகளை உள்ளடக்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள மேலும் பல யோசனைகளின் ஊடாக மத்திய அரசாங்கம் பெருமளவில் பலவீனமடையும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.