பொன்.ராதாகிருஷ்ணன்-திருநாவுக்கரசர் அப்பல்லோ வருகை

268 0

201612051215234509_jayalalithaa-helath-about-pon-radhakrishnan-and_secvpfமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைப் பற்றி விசாரிப்பதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருநாவுக்கரசர் அப்பல்லோவுக்கு வந்தனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைப் பற்றி விசாரிப்பதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பியதும் அவர் கூறியதாவது:-

சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், மதுசூதனன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை சந்திதது முதல்வரின் உடல்நலம் பற்றி விசாரித்தேன்.முதல்வர் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார்கள் என்றார்.தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதா உடல் நலம் பற்றி விசாரித்தார். அவர் கூறியதாவது:-

மூத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து முதல்வரின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தேன். உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார்கள். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.