முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரம்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை கேட்டவுடன் மிகுந்த துயர் அடைந்தேன். அவர் பாதிப்பில் இருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.மத்திய மந்திரி சுரேஷ் பிரபு: ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அவர் விரைவில் பூரண நலம் பெறுவார்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்: ஜெயலலிதா பற்றி செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி: ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அவரது உடல்நிலை விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன்.
மம்தாபானர்ஜி (மேற்கு வங்காள முதல் மந்திரி): ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவல் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் இருக்கும் எனது நண்பர்களும் நானும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் அவரை காப்பாற்ற வேண்டும்.பட்னாவிஸ் (மராட்டிய முதல் மந்திரி): மராட்டிய மக்கள் சார்பில் ஜெயலலிதா பூரணநலம்பெற பிரார்த்திக்கிறேன்.
சித்தராமையா (கர்நாடக முதல்வர்): கர்நாடகா மக்கள் சார்பில் ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.லல்லுபிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்): ஜெயலலிதா உடல் நலம் மிகுந்த கவலை அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். எல்லோரும் அவருக்காக பிரார்த்திக்கிறோம்.
நடிகர் சத்ருக்கன்சின்கா: ஜெயலலிதா மாரடைப்பு பற்றிய செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அவர் மிகப்பெரிய புரட்சிகரமான தலைவர் அவருக்காக எனது பிரார்த்தனைகள்.
கேரளா கவர்னர் சதாசிவம்: ஜெயலலிதா உடல் நலம் பற்றிய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.