ஹோட்டல்களுக்கு பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை!

268 0

சிறிலங்காவில் உள்ள 40 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஹோட்டல்களுக்கு அடுத்த வாரம் பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தமது தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆர்வமாகவுள்ள மற்றும் தமது அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

கொரோனா தொற்றுக்கு பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக சிறிலங்காக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் தமது அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்புக்கு உகந்தது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்க அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.