ஐஎஸ் அமைப்பினர்கள் எவரும் இலங்கைக்குள் நுழையவில்லை- இராணுவத் தளபதி

350 0

ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது.

பிரித்தானியாவின் சன் செய்தித்தாளில் வெளியான செய்தியை இராணுவத்தளபதி நிராகரித்துள்ளார்.


அவ்வாறான ஐஎஸ் உறுப்பினர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரிட்டனின் சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐஎஸ் இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ஐஎஸ் உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சன் தெரிவித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயற்படும் நாடுகளின் விபரங்களை வெளியிட்டுள்ள சன் இலங்கையும் அதிலொன்று என குறிப்பிட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்பு தனது சாம்பலில் இருந்து மீண்டும் எழுகின்றது ,சர்வதேச அளவில் கொலைகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடுகின்றது என சன் தெரிவித்துள்ளது.

மொசாம்பிக்கின் வடபகுதியில் ஐஎஸ் அமைப்பின் தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை சன் சுட்டிக்காட்டியுள்ளது.