தேவையற்ற எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடமளிக்கப்படக் கூடாது என சமூக மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனாவசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு போராட்டங்களை கலைத்து விரட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நல்ல விடயங்களை செய்ய முயற்சிக்கும் போது அதில் குறை காணும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அவர்கள் நாட்டை முன்னோக்கி நகர்த்துதவற்கு இடமளிப்பதில்லை.இந்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.