உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

291 0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழு கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி நாட்டின் கொவிட்-19 நிலைமை கருதி தனது நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானித்திருந்தது.

ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுடன் தொடர்புபட்ட கொழும்பு குற்றப் பிரிவின் (சிசிடி) அதிகாரி ஒருவர் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.

இதேவேளை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நாளை ஊடகங்களுக்கு திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.