கொழும்பு நகரத்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளின் போது 100 பேரில் 30 பேர் நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்புவடக்கு மற்றும் பொரளை பகுதிகளே மிகவும் ஆபத்தான பகுதிகளாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்களில் 100இல் 30 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதரை வனாத்தவில்லு ஜிந்துபிட்டி போன்ற மிகவும் ஆபத்தான பகுதிகளிலேயே இந்த நிலைமை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாங்கள் பிசிஆர் சோதனைகளை தீவிரப்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.