கொக்கிராவ மாமினியாவ விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

285 0

anuradhapura-5அனுராதபுரம் கொக்கிராவ மாமினியாவ விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றதாகவும், தாக்குதல் நடாத்தப்பட்டபோது குறித்த விகாரையில் எவருமே இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலாளிகள் விகாரைக்குள் சென்றும் அங்கிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்துள்ளதாக கொக்கிராவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.