சிறீலங்கா விமானப்படைக்கு புதிதாக ஆறு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணக்கம் தெரிவித்துள்ள அமைச்சரவை இதற்கு 560கோடி ரூபாவை ஒதுக்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் சிறீலங்கா விமானப்படைக்கு புதிதாக 12 ஜெட் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான திட்டமும் உள்ளதாக விமானப்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.