பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்கு- லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

398 0

201612041119438352_raul-castro-cuba-will-ban-naming-of-monuments-after-fidel_secvpfஅமெரிக்காவுக்கு மிக அருகில் அமைந்த தீவு நாடான கியூபாவின் பிரதமராகவும், அதிபராகவும் சுமார் 50 ஆண்டு காலம் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. கம்யூனிச கொள்கைகளில் பிடிப்பு கொண்ட அவர் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார். உடல்நல குறைவு காரணமாக 2008–ல் ஆட்சியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ  25-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் அனுதாபம் தெரிவித்தனர்.

பிடல் காஸ்ட்ரோவின் விருப்படி அவரது உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. அவரது உடலின் சாம்பல் கியூபா மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு பகுதிகளுக்கு சுற்றி வந்தது. கியூபாவின் கிழக்கு நகரான சாண்டியாகோவில் அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தனது மறைந்த சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி மரியாதையை வழிநடத்திச் சென்றார். இறுதியில் சான்டியாகோ நகரில் உள்ள சான்ட்டா இபிஜெனியா கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு அவரது அஸ்திக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.