வேல் யாத்திரை போன்ற ஆரவார அரசியல் தேவையற்றது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

239 0

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா உதவினால்தான் மக்கள் மனதில் நிலைத்த இடம் கிடைக்கும் என தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜனதா வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. காவல்துறையும் அனுமதி அளிக்கவில்லை. இருந்தாலும் தடையை மீறி தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை மேற்கொண்டனர். மூன்று முறை எல். முருகன் உள்பட பா.ஜனதாவினர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த இநிலையில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘‘யாத்திரை போன்ற ஆர்ப்பாட்ட, ஆரவார அரசியல் தேவை அற்றது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாரதீய ஜனதா உதவினால்தான் மக்கள் மனதில் நிலைத்த இடம் கிடைக்கும். அதிமுக இந்து மத வழிபாட்டிற்கு எதிரானது அல்ல. பா.ஜனதா கட்சியை வளர்க்க பல்வேறு வழிகள் உள்ளன’’ என்றார்.