ஈரானிற்கு எதிராக டிரம்ப் இராணுவநடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளாரா?

254 0

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெரை அவசரஅவசரமாக டொனால்ட் டிரம்ப் பதவிநீக்கியுள்ளமை டிரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவநடவடிக்கையை ஆரம்பிக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் எதிரிநாடுகளுக்கு எதிராக டிரம்ப் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அச்சம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் முக்கியமாக ஈரானிற்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் இறங்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.


பதவிநீக்கப்பட்டுளள எஸ்பெர் ஈரான்; குறித்தும் அதன் இராணுவ அதிகாரியை இலக்குவைத்து ஈராக்கில் இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதல்கள் குறித்தும் டிரம்புடன் முரண்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் இறுதிநாட்களை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றார் என்ற ஊகங்களின் மத்தியில் அதிகாரிகள் அவர் அமெரிக்காவின் எதிரிகளை இலக்குவைக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி இராணுவநடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
டிரம்ப் தனது பதவிக்காலத்தின் இறுதிநாட்களில் இந்த இராணுவநடவடிக்கையை ஆரம்பிக்கலாம் அது வெளிப்படையானதாகயிருக்கலாம் அல்லது இரகசியமான நடவடிக்கையிருக்கலாம் என பாதுகாப்பு திணைகள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


இன்னமும் 72 நாட்களே பதவியில் இருக்கப்போகின்ற ஒருவர் பாதுகாப்பு செயலாளரை பதவி விலக்குகின்றார் என்றால் அதற்கு இரண்டு காரணங்களே உள்ளன ஒன்று திறமையின்மை அல்லது அந்த நபர் தவறிழைத்திருக்கவேண்டும்,

பாதுகாப்பு செயலாளருக்கு அந்த இரண்டு காரணங்களும் பொருந்தாது என ஒபாமாவின் காலத்தில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியாக விளங்கிய எலிசா ஸ்லொட்கின் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரை பதவி நீக்கியது பழிவாங்கும் செயலாளகமிருக்கலாம் பாதுகாப்பு செயலாளரை அவ்வாறு நடத்த முடியாது என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது பாதுகாப்பு செயலாளர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என தான் கருத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் எடுக்கவுள்ளார்,இதன் காரணமாகவே அவரை டிரம்ப் பதவி நீக்கியிருக்கலாம் இது அச்சம் தரும் நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய நிலையத்தை சேர்ந்த கிறிஸ்டொபர் மில்லரை புதிய பாதுகாப்பு செயலாளராக டிரம்ப் நியமித்துள்ளார்.
டிரம்பின் ஈரானிற்கு எதிராக கொள்கைகளே இவரே திட்டமிட்டார் என பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.