பாரதூரமான சம்பவமொன்றை தொடர்ந்து பிரேசில் சீனாவின் கொரோனா வைரஸ் மருந்தினை பரிசோதனை செய்வதை இடைநிறுத்தியுள்ளது.
சீனாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவிக் பயோடெக் பிரேசிலின் புட்டன்டன் நிறுவகத்தின் உதவியுடன் தனது கொரோனா வைரஸ் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை பிரேசிலில் ஆரம்பித்துள்ளது.
130.000 தொண்டர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த சோதனை மருந்திற்கு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர் இடம்பெறும் முக்கிய சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் 29 ம் திகதி தொண்டர் தொடர்பில் பாரதூரமான சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பிரேசிலின் சுகாதார ஒழுங்குபடுத்தல் கண்காணிப்பு முகவர் அமைப்பு இதனை தொடர்ந்து சோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
ஆபத்து குறித்தும் தரவுகள் குறித்தும் ஆராய்வதற்காக இந்த சோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என பிரேசில் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சோதனை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் எந்த தொண்டர்களையும் சோதனைக்கு உட்படு;த்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த சோதனை நிறுத்தம் சீனாவின் கொரோனா மருந்து தயாரிப்பு முயற்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு என சிஎன்என் தெரிவித்துள்ளது.