மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
யேர்மனி.
தொலைபேசி:- 0151 27959234
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் 2020 யேர்மனி.
ஊடக அறிக்கை.
வரலாற்று நாயகர்களாக, தமிழ்த்தேசிய விடுதலைப் பாதையில் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று நின்று, தமிழீழ விடுதலையை உளமாற ஏற்று, நிமிர்ந்து களமாடி பல்வேறு களங்களிலே, பல்வேறு வடிவங்களிலே தங்களை ஆகுதியாக்கி, எங்கள் நெஞ்சப் பசுமையிலே நிறைந்து வாழும் மாவீரச் செல்வங்களின் ,லட்சியக் கனதிமிக்க விதைகுழிகள் உயிர் பெறும் நவம்பர் 27ல் (27.11.2020 வெள்ளி) எங்கள் காவல் தெய்வங்களை ஒருசேர நினைவிருத்தி, உணர்வெழுச்சியுடன் சுடரேற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கு தயாராகுவோம்.
தமிழீழ தேசத்தின் சுதந்திர நாளை எட்டும் வரையிலும், அதற்குப் பின்னரும் உலகத் தமிழ் மக்களின் உணர்வெழுர்ச்சிப் பெருக்கின் முதன்மையானதாக மாவீரர் நினைவேந்தல் ஒன்றிணைந்த மக்கள் திரட்சியின் முன்னால் சுடர்விடும் என்பதிலும், அதுவே நாம் வாழும் வாழ்விட தேசத்தின் நாடு தழுவிய கூர்மையான அடையாளமாகவும் அமையும் என்பதில் எவ்வித ஐயமோ அல்லது மாற்று எண்ணங்களோ ,ல்லை என்பதை மாவீரர் மீது உறுதி கொள்வோம்.
இவ்வாண்டு மட்டும் நிலைமாறுகால நெருக்கடிக்கான, ,யல்புச் சூழமைவையும், பேரிடர்கால மக்கள் நலனையும், வாழ்விட தேசச்சட்ட அறிவுறுத்தல்களையும் தாங்கி வழமைக்கு மாறாக மாநிலங்களை ,ணைப்புச் செய்யும் வகையில் பின்வரும் பெரு நகரங்களில் நினைவேந்தலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். பேரிடர்கால கவனத்தின் மூலமான ஒழுங்கமைப்பின்படி யேர்மனிய நாட்டில்,
- Bremerhaven
- Düsseldorf
- Stuttgart
- München
ஆகிய பெரு நகரங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. மண்டபம், திறந்தவெளி பற்றிய அமைவிட விபரங்கள், பிரத்தியேக சுகாதார நடைமுறை ஒழுங்கில் நாளாந்தம் ஏற்படும் மாற்றங்கள், விசேட அறிவுறுத்தல்கள் பற்றிய விடயங்களை எமது மக்களுக்கு தொடர்ச்சியாக அறியத் தரப்படும்.
எம் தாயக உறவுகளையும், பல்தேசிய மொழிவழிச் சமூகங்களையும், அவர்களின் வாழ்விட தேசங்களையும், நோயால்ப் புரட்டி, அபாயகரமான அசாதாரண சூழ்நிலைகளை தோற்றுவித்து, சமகாலத்தை விரட்டிக் கொண்டிருக்கும் ‘கோவிட் 19’ அல்லது ‘கொறோனா’ எனும் நுண்ணுயிர்க் கிருமியின் பேரிடர், எமது பல்வேறு நிழ்வுகளையும், ஒருமித்த செயற்பாடுகளையும் பாரிய அளவில் முன்னெடுப்பதற்கு தடையாக இருப்பினும், அதனையும் எதிர்கொண்டபடி, எமது மாவீரர்களின் வணக்க நிகழ்வுகளையும் தாங்கிச் சுமந்து கடப்போம்.
எமது வாழ்விட தேசத்தின் பேரிடர்காலச் சுகாதார அறிவுறுத்தல்களை கவனத்தில் கொண்டு, அவதானத்தோடும், விழிப்போடும், எம்மையும், எமது மக்களையும் பாதுகாத்தபடி தெரடர்ந்து பயணிப்போம். இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பேரிடர்கள் எம் மக்களைச் சூழ்ந்த போதெல்லாம், திட்டமிட்ட பெரும்போரை எம் மக்கள்மீது எதிரிப்படைகள் வலிந்து திணித்தபோதெல்லாம் மாவீரர்களே காப்பரண்களாகவும், கவசங்களாகவும் எம்மைக் காத்துநின்றார்கள்.
அம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், நெருக்கடிகளைத் தவிர்த்தல், சுகாதார நடைமுறைகளைப் பேணுதல், சமூக இடைவெளிகளைப் பேணுதல் போன்ற விடயங்களில் மிக நுணுக்கமான கவனங்களைச் செலுத்துதல் எல்லோருக்கும் உரித்துடையதாகும். எனவே எமது உறவுகள் தங்கள் முளுமையான ஒத்துழைப்பை வழங்கி, மாவீரர் நினைவேந்தலை உணர்வெளுச்சியுடன் முன்னெடுத்து, எமது தேசிய விடுதலை நோக்கிய பாதையில், போராட்ட இலட்சிய தாகம் குன்றாது பயணிக்க உறுதி கொள்வோமாக.
நன்றி.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
மாவீரர் பணிமனை,
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,
யேர்மனி.