போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

315 0

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 1050 போதை மாத்திரைகளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (9) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நிலாவெளி, ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்தவர் (33 வயது) என தெரியவந்துள்ளது.

நிலாவெளி பிரதேசத்தில் கடை ஒன்றினை உடைத்து பொருட்களை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது திருடிய பொருட்களை வீடு ஒன்றினுள் மறைத்து வைத்திருப்பதாக சந்தேகநபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது வீட்டுக்குள் இருந்து 1050 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை இன்றைய தினம் (10) திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.