கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில், துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் வயது 62 என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இந்தியா தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றனர்
இருப்பினும் குறித்த கொலை சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் உடனே பெற முடியவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன் கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் விசாரணையை தொடர்ந்து சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதுடன். மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிசார் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.