கிளிநொச்சி ஏ – 9 வீதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஏ – 9 வீதி வலயக்கல்வி பணிமனை அருகில் டிப்பர் வாகனமொன்று, முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
நேற்று (08.11.2020) இரவு 7 மணியளவிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவர் உட்பட மூவர் காயமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள் .