ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் தாக்குதலுக்குள்ளானார்.ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு சென்றுள்ளார்.
பிரபல கல்லூரி ஒன்றில் கல்விகற்கும் 14 வயதுடைய மாணவர் ஒருவர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இணையத்தளத்தில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பாடசாலை மாணவர்கள் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இந்த தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.