மேல் மாகாணத்தில் 256 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

272 0

மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் 256 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், தொடர்ந்தும் 250 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 317 மேல் மாகாண பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், மொத்தமாக ஆயிரத்து 447 பொலிஸ் அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.