ஒரு இலட்சம் அன்டிஜென் பரிசோதனைக் கருவித்தொகுதிகளை வழங்கியது உலக சுகாதார ஸ்தாபனம்

268 0

கொரோனா தொற்று நோயாளிகளை உடனடியாக அடையாளம் காண்பதற்கான, ஒரு இலட்சம் அன்டிஜென் பரிசோதனைக் கருவித்தொகுதிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனை ஔடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பரிசோதனைக் கருவி தொகுதிகள், சுகாதார அமைச்சின் மருந்துகள் விநியோக பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த பரிசோதனைக் கருவி தொகுதிகளை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு, உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இன்று மாலை இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெறும் 20 நிமிடங்களில் முடிவுகளை வழங்கும் ரேபிட் அன்டிஜென் கோவிட் -19 சோதனையின் பயன்பாடு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.