கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரசபை தெரிவு

314 0

imagesஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத்தெரிவு இன்று நடைபெற்றது.

இன்று காலை 11 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில்  கிளிநொச்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் குறித்த தெரிவு நடைபெற்றது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத் தெரிவில் அதிகாரசபைச் செயலாளர், இருபது அதிகாரசபை உறுப்பினர்கள் மற்றும் ஐந்து அதிகாரசபைக்கான ஆலோசகர்கள்  தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது பிரச்சனைகளை நேரடியாகவும், கடிதம் மூலமும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் தெரிவித்தனர்.

இத் தெரிவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அவருடைய பிரத்தியேக செயலாளரும் தந்தையுமான இராமநாதன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர், கட்சியின் உறுப்பினர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்