கொரோனா நோயிலிருந்து விடுபட இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். வண்ணார்பண்ணை பெருமாள் ஆலயத்தில் மாபெரும் யாகம் நடத்தப்பட்டது.
கொரோனா தொற்று நோயிலிருந்து நாடும் நாட்டு மக்களும் மீண்டு வர வேண்டும் என்பதற்காக சகல இந்து ஆலயங்களிலும் ஹோமம், விசேட வழிபாடுகளைச் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக் கமைவாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.30 மணியளவில் யாழ். மாவட்ட இந்துக் குருமார் ஒன்றியத்தினால் சுதர்சன ஹோமமும் விசேட வழிபாடுகளும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக இவ்வாலயத்தில் நடைபெற்றன.
இந்தப் பிரார்த்தனையின் ஊடாக சகல மக்களும் நோயிலிருந்து விடுபட்டு தங்களுடைய வழமையான வாழ்க்கையை வாழ்வதற்கு இறைவனை வேண்டி குறித்த யாகம் நடத்தப்பட்டது.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் யாகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.