நாங்கள் நடந்தது…….!

6655 12

tblblacktigerநாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர
தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம்
வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே
நிமிர்வதற்காய் நிமிருங்கள் நீதிக்காய் துணியுங்கள்

துணிவுடைத்தோன் தலைவனவன் சொல்லியதை மறக்காதீர்
மறக்காது மதிநுட்பம் தாங்கியோராய் மதிகொடெழுந்தலே
எழுச்சியிலே பேரெழுச்சி காணுகின்ற நிலை தோன்றும்
தோற்றத்தின் தொடராக மாற்றங்கள் நிகழ்ந்தேறும்

ஏற்றமதை காண்பதற்கு எங்களுக்குள் எழுச்சிகொள்வோம்
தன்னெழுச்சி கொள்ளாது மண்னெழுச்சி கொள்ளாது
கொள்கையிலே உறுதிகொண்டோர் தோற்றதில்லை உலகினிலே
உலகினிலே நீதியொன்றும் ஒருநாளில் கிடைத்திடாது

கிடைத்திடாது என்று சொன்னால் பல தேசியகீதங்கள் தானேது
தானே தனியானாய் படைகொண்டு தடம்பதித்த எம்மிளவல்
இளவலவன் செயலொன்றே உனக்கான வழிகாட்டி
வாழிகாட்டியைத் தேடி உன் வாழ்வைத் தொலைக்காதே

தொலையாத தேசத்தை மீட்கின்ற பணியாற்றி மிடுக்கோடு எழுவாயா
எழுதல் கடிணமென்று இவ்வுலகத் தடமிருந்து அழிவதுதான் நிலையா
நிலைமாற நீ மாறு நிலையான தேசமதை மீட்டு நிமிர்வதற்காய்!

Leave a comment