சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
ஆனாலும், வைத்திய சக்தி மற்றும் போதுமானதாக அமையாது என்பதனால் தெய்வீக சக்தியின் மீது நம்பிக்கை வைத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டு மக்களிடமும் சமயத் தலைவர்களிடமும் கொரோனா தொற்று நீங்க, பூஜை வழிபாடுகளில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்தார்.
அக்கோரிக்கைக்கு அமைய மலையகத்தின் இந்து மற்றும் கிறிஸ்த்தவ இஸ்லாமிய ஆலயங்களில் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்தவகையில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தலைமையில் கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
விநாயகர் வழிபாடு விசேட பிணி நீக்கும் 27 மூலிகைகளை கொண்ட விசேட யாக பூஜையாக இடம்பெற்றதுடன், அதில் 108 தடவை மிருதஞ்ச பெருமானுக்கு நாம அர்ச்சினை இடம்பெற்றன.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதனால் பூஜை வழிபாடுகள் சுகாதார பொறிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை பக்தர்களே கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.
பூஜை வழிபாடுகளை கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய பிரதம குரு. ஸ்கந்தராஜா சிவாச்சாரியார் நடத்தி வைத்தார்.
அதனை தொடர்ந்து கொரோனா ஒழிய வேண்டும் என விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளுக்கு கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் உட்பட பிரதேசவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.