ஃபிடல் காஸ்ரோவிற்கு இன்று வவுனியாவில் அஞ்சலி

316 0

fidel-castroவவுனியாவில் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவின் அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது.

அமரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதிமிக்க எதிர்ப்பாளனும், உலக உழைக்கும் மக்களின் புரட்சிகர விடுதலை வீரனும், கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ரோவின் நினைவு தினம் இன்று புதிய ஜனநாயக மக்சிச-லெனினிச கட்சியின் வன்னி மாவட்டங்களுக்கான செயலாளர் என்.பிரதீபன் தலைமையில் வவுனியா நகரசபை விருந்தினர் மண்டபததில் அனுஸ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் எழுத்தாளர் கே.கே.அருந்தவராஜா, புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன், தோழர் இரா.இராஜேஸ்வரன், தோழர் கா.மகேந்திரன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் பூ.சந்திரபத்மன், தோழர்,ஜீந்தீசன், புதிய சிந்தனை பெண்கள் வலையமைப்பின் தலைவி நி.பிரவீனா ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர்.