கொழும்பு 02 , யூனியன் பிளேஸில் பல்பொருள் அங்காடி மூடப்பட்டது

266 0

கொழும்பு 02 , யூனியன் பிளேஸில் அமைந்துள்ள பல் பொருள் அங்காடியில்  கிளை மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு 02 , யூனியன் பிளேஸில் அமைந்துள்ள பல் பொருள் அங்காடியில் பணி புரிந்த இரண்டு ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களா அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, குறித்த யூனியன் பிளேஸில் கிளை மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

 

அத்துடன் குறித்த கிளை தற்காலிகமாக மூடப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சுகாதார அதி காரிகளின் அறிவுறுத்தலின் படி மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்ட இருவரும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட் டுள்ளதாகவும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண் டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.