நேற்று கொழும்பிலேயே அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

260 0

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 449 கொரோனா வைரஸ் நோயாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து 117 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹாவிலிருந்து 174 பேரும்,இரத்தினபுரியிலிருந்து 25பேரும் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 13149 ஆக காணப்பட்டுள்ளது.இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13000 என்ற எண்ணிக்கையை கடந்த 106வது நாடாக இலங்கை மாறியுள்ளது.