இலங்கையில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 832 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 425 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேநேரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதியில் மாத்திரம் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதன்போது 22 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.