கொழும்பு துறைமுக நகரில் மேலும் ஒரு பில்லியன் முதலீட்டை மேற்கொள்ளும் சீனா

238 0

கொழும்பு துறைமுக நகரில் மேலும் ஒரு பில்லியன் முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளது.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ.எப்.சி. எனப்படும் சர்வதேச நிதி மையம் (international financial centre) இந்த நிதி முதலீட்டைச் செய்யவுள்ளது.

தற்போது சர்வதேச நிதி மையத்தின் முதலீடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்காக காணப்படுகின்ற சட்டவாக்க வரைவுகளை இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனையடுத்து இம்மாத இறுதிக்குள் அதற்கான நாடாளுமன்ற அங்கீகாரம் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு நாடாளுமன்றம் அங்கீகாரம் பெறப்பட்டவுடன் சர்வதேச நிதி மையம் தனது முதலீடுகளை 2021ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கவுள்ளது.

இந்த முதலீடுகள் துறைமுக நகரத்தின் ஒட்டுமொத்த திட்டங்களினதும் முன்னோடித் திட்டத்திற்கானதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.