உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறைமையில் நடாத்தப்படக் கூடாது-அனுரகுமார திஸாநாயக்க

360 0

anurakumaraபுதிய தேர்தல் முறைமை அடிப்படையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடாத்தப்பட்டால் அந்த தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைமையானது, இரண்டு கட்சி முறைமையை உண்டாக்கும் என்பதுடன், நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்தும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது புதிய தேர்தல் முறையில் நடைபெறுமனால் பல்வேறு பிரசனைகளை ஏற்படுத்தும் என்று அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பழைய தேர்தல் முறைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறமானால் அது சிறந்ததாக அமையுமென்று கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி அச்சத்தில் உள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய தேர்தல் முறைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.